சிரியாவில் குர்திஷ் போராளிகள் மீது துருக்கி நடத்திய தாக்குதல்.!
கடந்த இரண்டு நாட்களில் 12 வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, துருக்கி விமானப்படை வடக்கு ஈராக் மற்றும் சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதுள்ளது. அண்டை நாடான ஈராக்கில் உள்ள PKK தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் ஒரு பகுதியாக துருக்கி தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், வடக்கு ஈராக்கில் கடந்த இரண்டு நாட்களில் 12 வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, துருக்கி விமானப்படை நேற்று (சனிக்கிழமையன்று) இரவு வடக்கு ஈராக் மற்றும் சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் சட்டவிரோத குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் (பிகேகே) 29 இலக்குகளை அந்நாட்டு அழித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
குர்திஸ்தான் போராளிகள் பயன்படுத்தியதாக நம்பப்படும் தளங்கள், தங்குமிடங்கள் மற்றும் எண்ணெய் வசதிகள் ஆகியவற்றை குறிவைத்து துருக்கி விமானப்படை நேற்று இரவு 10 மணிக்கு இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களைகட்டும் அயோத்தி கும்பாபிஷேக விழா.! தவிர்க்கும் I.N.D.I.A கூட்டணி தலைவர்கள்.!
1980-களில் இருந்து தடைசெய்யப்பட்ட குர்திஷ் பிரிவினைவாத குழுவுக்கு தொடர்புடையதாக நம்பும் சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள இலக்குகளை குறிவைத்து துருக்கி வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.