அஜித் எனக்கு உதவி செய்யவில்லை! மறைந்த நடிகர் போண்டாமணி கண்ணீர் பேட்டி!
காமெடி நடிகர் போண்டா மணியின் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் போண்டா மணி உயிரோடு இருந்த சமயத்தில் பேட்டி கொடுத்த பழைய வீடியோக்களும் வைரலாகி கொண்டு வருகிறது. அந்த வகையில் கடைசியாக அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் அஜித்குமார் தனக்கு உதவி செய்யவில்லை என்று கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் போண்டாமணி பேசியதாவது ” அஜித்குமார் நடிப்பில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான ‘மைனர் மாப்பிள்ளை’ படத்தில் முதலில் அஜித் நடிக்கவில்லை முதலில் ரஞ்சித் தான் நடித்து வந்தார். பிறகு சில காரணங்களால் படத்தில் இருந்து அவர் விலகினார். பிறகு இந்த படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என படக்குழு யோசித்து கொண்டு இருந்தார்கள்.
நடிகர் போண்டா மணிக்கு என்ன பிரச்சனை…எதனால் உயிரிழந்தார்.?
அந்த சமயம் நான் தான் இந்த திரைப்படத்தில் அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். அதன் பிறகு தான் அஜித் இந்த படத்திற்குள் வந்தார். அதன்பிறகு பெரிய நடிகராக வளர்ந்த பின் உதவி செய்கிறேன் என்று சொல்லி அவர் எனக்கு உதவியே செய்யவில்லை படத்திலும் பெரிதாக வாய்ப்பு அஜித் எனக்கு வாங்கி தரவில்லை.
என்னுடைய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு நிறைய பணம் தேவைப்பட்டது பல பிரபலங்களும் உதவி செய்து இருந்தார்கள். நான் எல்லாரிடமும் உதவி கேட்டு கொண்டிருந்த சமயத்தில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் பலமுறை பண உதவி எதாவது செய்யுங்கள் என்று கேட்டு இருந்தேன். அவரும் அதையெல்லாம் கேட்டுவிட்டு அஜித் கிட்ட சொல்வதாக சொன்னார். ஆனால், கடைசி வரை எனக்கு உதவி கிடைக்கவில்லை” என மிகவும் வேதனையுடன் போண்டா மணி பேசியுள்ளார்.