ஆந்திர அரசியலில் சலசலப்பு.. சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பிரசாந்த் கிஷோர்..!

ஆந்திராவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் பிரசாந்த் கிஷோர் உதவுவார் என்ற செய்திகளுக்கு மத்தியில், பிரபல தேர்தல் ஆலோசகரும், (I-PAC) ஐபேக் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் நேற்று எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்தார்.

ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் உடன் விஜயவாடா கன்னவரம் விமான நிலையத்தை பிரசாந்த் கிஷோர் வந்தடைந்தார். பின்னர் இருவரும் அமராவதியின் உண்டவல்லியில் உள்ள சந்திரபாபுநாயுடுவின் இல்லத்திற்குச் சென்றனர். அங்கு பிரசாந்த் கிஷோர் சந்திரபாபுநாயுடுவிடம் பேசினார்.

பின்னர், விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், சந்திரபாபுவை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்ததாகவும், அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. அரசியலில் மிக மூத்த தலைவர் என்பதால், அழைத்தவுடன் வந்ததாகவும், நீண்ட காலமாக இந்த சந்திப்பு நிலுவையில் இருந்தது. அவரை சந்திப்பதாக உறுதியளித்தேன் அதனால் சந்தித்தேன் என கூறினார்.

கடந்த 2019 இல், பிரசாந்த் கிஷோர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் பணியாற்றினார். ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அக்கட்சி பெரும்பான்மை பலத்துடன் தெலுங்கு தேசம் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ  175 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 151 இடங்களைக் கைப்பற்றியது. அதேபோல 25 மக்களவைத் தொகுதிகளில் 22 இடங்களை கைப்பற்றியது.

2014 தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரத்தில் பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்கு வகித்தார். இதைத்தொடர்ந்து, 2021இல் அவர் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுகவுக்குத் தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் இருந்த நிலையில், அதன் பிறகு ஐபேக் நிறுவனத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்