இது தான் தோனிக்கு கடைசி ஐபிஎல்லா? காசி விஸ்வநாதன் பதில்!

CSK DHONI

அடுத்த ஆண்டு (2024) ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில், சமீபத்தில் (டிசம்பர் 19 ) ஆம் தேதி மினி ஏலம் துபாயில் நடந்தது. அதில் ஐபிஎல்லில் விளையாடும் அணிகள்  தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் வாங்கினர். அதனை தொடர்ந்து தற்போது வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில்  விளையாட தயாராகி வருகிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரையில் வழக்கம்போல, அடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டனாக செயல்படுவார். இந்த தகவல் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். இருந்தாலும் ரசிகர்களுடைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காத ஒரு கேள்வி என்னவென்றால்  என்னவென்றால் தோனியின் ஓய்வு பற்றிதான். ஏனென்றால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஏற்கனவே ஓய்வுபெற்றுவிட்டார்.

குடும்பத்துக்கு ரொம்ப உதவியா இருக்கும்! சென்னை ஏலத்தில் எடுத்தது குறித்து டேரில் மிட்செல் எமோஷனல்!

ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தொடர்ச்சியாக விளையாடி கொண்டு இருக்கிறார். எனவே, ரசிகர்கள் பலரும் தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்ற பயத்துடன் தான் இருக்கிறார்கள். தோனியும் தன்னுடைய ஐபிஎல் ஓய்வு குறித்து தெளிவான எந்த பதிலையும் கூறாமல் இருக்கிறார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடி விட்டு தோனி ஐபிஎல் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்று விடுவார் என தகவல் சமீபத்தில் வெளியானது.

அந்த தகவல் குறித்து சென்னை அணியின்  தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது கேள்வியாக கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதில் அளித்த அவர்  ” தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்று எனக்கு தெரியாது. இந்த கேள்வி பற்றி கேப்டன் தோனி நேரடியாக உங்களுக்கு பதில் அளிப்பார். அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பற்றி எங்களிடம் இன்னும் பேசவில்லை.

இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் தோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை தொடர்ந்து தோனி தற்போது நன்றாக இருக்கிறார். வருகின்ற ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக தயாராகிவிடுவார், இன்னும் 10 நாட்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டிக்கான வலைப்பயிற்சியை தொடங்குவார்” எனவும் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்