சொந்த அணிக்கு துரோகம்.. டி20 உலகக்கோப்பையில் வேறு அணிக்கு பயிற்சியாளராக பொல்லார்ட்..!

உலகெங்கிலும் உள்ள அனைத்து கிரிக்கெட் அணிகளும் இப்போது அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை மட்டுமே எதிர்பார்த்து இருக்கிறார்கள். டி20 உலகக்கோப்பை நடைபெற இன்னும் 6 மாதங்கள் குறைவாக உள்ளது.  2024 டி20 உலகக் கோப்பை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் தொடங்கப் போகிறது. இந்நிலையில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு மேற்கிந்திய தீவுகளின் கீரன் பொல்லார்டை ஆலோசகர் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 2024 டி20 உலகக் கோப்பை வரை ஆல்ரவுண்டருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமோ அல்லது கீரோன் பொல்லார்ட் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கீரன் பொல்லார்ட் சர்வதேச கிரிக்கெட்டில் பெயர் ஒலிக்கும் சில வீரர்களில் ஒருவர். இவரால் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 முறை டி20 உலக கோப்பையை கைப்பற்றியது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்:                  

கீரன் பொல்லார்ட் டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று கருதப்படுகிறார் என்பதில் சந்தேகமில்லை. எந்த ஒரு பந்து வீச்சாளரையும் உச்சத்தில் அடித்து நொறுக்கும் வல்லமை படைத்த இந்த வீரர், தற்போது பயிற்சியிலும் கலக்கி வருகிறார். இந்தியன் பிரீமியர் லீக்கில்  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு  பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார்.  தற்போது இங்கிலாந்தின் ஆலோசகர் பயிற்சியாளராக மாறி கீரன் பொல்லார்டின் ஆளுமையை அதிகரித்துள்ளது.

மீண்டும் ஃபார்மிற்கு திரும்பிய வெஸ்ட் இண்டீஸ்:

சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்துக்கு முன், மேற்கிந்திய தீவு அணி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவை டி20 தொடரிலும் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்