தீவிரவாத தாக்குதல்.. இணையதள சேவை நிறுத்தம்..!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் டிசம்பர் 21 அன்று பூஞ்ச் பகுதியில் இரண்டு பயங்கரவாதிகள் ராணுவ வாகனங்கள் மீது வெடிகுண்டுகளை வீசினர். இந்த நடந்த தாக்குதலில் 4 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். ரஜோரி-பூஞ்ச் காடுகளில் இந்த பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, அன்றைய தினம் முதல், ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய பகுதிகளில் பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளை தேடும் ராணுவம் மற்றும் காவல்துறையினரின் தேடுதல் பணி இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது. வியாழக்கிழமை மாலை முதல் ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் மொபைல் மற்றும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது நடந்த தாக்குதலில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் இந்தத் தாக்குதல் மீண்டும் புல்வாமா தாக்குதல் சம்பவமா என மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர். பூஞ்ச் பயங்கரவாத தாக்குதலுக்கு மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி (PAFF) பொறுப்பேற்றுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024