கேரளாவில் 30 கிராமங்களை தத்தெடுக்கும் எச்டிஎஃப்சி வங்கி..!!
கேரளாவில் பெய்த கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்தது.இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் மீளா துயரில் உள்ளனர்.மொத்தமுள்ள 14 மாவட்டத்தில் 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உடை,இருப்பிடம்,என அனைத்தையும் இழந்து அம்மாநிலம் தவித்து வரும் இந்தநிடையே வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 30 கிராமங்களை தத்தெடுக்க உள்ளதாக எச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது.இதுகுறித்து தெரிவித்துள்ள அந்த வங்கியின் மேலாண் இயக்குநர் ஆதித்யா பூரி, நிவாரண பணிகளுக்காக 10 கோடி ரூபாய் வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த தொகை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்
. @HDFC_Bank to adopt 30 villages for rehabilitation in flood-hit Kerala; contribute Rs 10 crore to the Chief Minister’s Distress Relief Fund as an immediate relief measure. https://t.co/EXhsGQxWwI #WeStandWithKerala #RebuildKerala pic.twitter.com/oelTsDFHIT
— HDFC Bank News (@HDFCBankNews) August 29, 2018
DINASUVADU