பாலியல் புகாரில் சிக்கிய பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல்.!

Vin Diesel

பிரபல ஹாலிவுட் படங்களில் ஒன்றன் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் சீரிஸ் பற்றி தெரியாத நபரே இல்லை. இவ்வாறு, பிரபலமாக இருக்கும் இந்த திரைப்படத்தை மூலம் பிரபலமான நடிகர் வின்  டீசல் தென்னிந்திய சினிமாவிலும் மிகவும் பிரபலமாக உள்ளார்.

இந்த நிலையில், ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ பட நடிகர் வின்  டீசல் மீது, சமீபத்தில் பாலியல் புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம், பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் மீதுஅவரது முன்னாள் உதவியாளர் ஆஸ்டா ஜோனாசன், லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தனது மனுவில் அவர், “2010ஆம் ஆண்டு Fast Five படப்பிடிப்பின் போது, அட்லாண்டா ஹோட்டலில் தனியறையில் வலுக்கட்டாயமாக அந்தரங்க செயல்களில் ஈடுபட்டதுடன், சுவரில் அழுத்தி பிடித்து கொண்டு, வின் டீசல் மோசமாக நடந்து கொண்டார்” என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனு அபராதத்துடன் தள்ளுபடி!

இந்த பரபரப்பான குற்றச்சாட்டு ஹாலிவுட்டை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கிட்டத்தட்ட பதின்மூன்று ஆண்டுகளுக்கு பின்பு, இந்த சர்ச்சை வெளிவந்துள்ளது. இந்நிலையில், ஜோனசன் தாக்கல் செய்த மனு மீது உரிய விசாரணை நடத்தி, அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் சில கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்