திமுக அமைச்சர்கள் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர்! வடிவேலு பாராட்டு.!

Vadivelu

தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பலருடைய இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு சாப்பிடுவதற்கு சாப்பாடு கூட இல்லாமல் மிகவும் கஷ்ட்டப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவுகளை திமுகவை சேர்ந்தவர்கள் மற்றும் மற்ற காட்சிகளில் இருப்பவர்களும் வழங்கி கொண்டு வருகிறார்கள்.

குறிப்பாக திமுக எம்பி கனிமொழி நேரடியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க மீட்பு துறையினருடன் ஈடுபட்டு மக்களை மீட்டார். அது மட்டுமின்றி தன்னுடைய சொந்த நிதியிலிருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த 3 நாட்களிலும் சாப்பாடுகளை செய்து வழங்கினார். அவரை போலவே திமுகவை சேர்ந்த பலரும் மக்களுக்கு உதவிகளை செய்தனர்.

இந்த நிலையில், மிக்ஜாம் புயலில் காணாமல் போன மரங்களுக்கு ஈடாக 5,000 மரங்கள் கொடுக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் வடிவேலு கலந்துகொண்டு திமுக அமைச்சர்களை பாராட்டினார். நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு ” வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்டு அவர்களுக்கு செய்து வரும் நிவாரண பணிகளை திமுக அரசு நன்றாக செய்து வருகிறது.

மக்கள் படும் வேதனைகள் மற்றும் அவர்களுடைய உணர்வுகள் எல்லாம் முதலமைச்சருக்கு புரிந்துள்ளது. அதனால் தான் எல்லா அமைச்சர்களும் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்று வேலை செய்து வருகிறார்கள். இந்த வெள்ளத்தில் உயிர்சேதம் இல்லாத வகையில், வேலை செய்து வருகிறார்கள். மழை எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வரலாம் எனவே அதற்கு நாம் கவனமாகவும் விழிப்புணர்வாகவும் இருக்கவேண்டும்” எனவும் நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
axar patel Ruturaj Gaikwad
myanmar earthquake
rishabh pant sanjiv goenka
mk stalin assembly
rishabh pant lsg
delhi parliament assembly