மக்களவையில் நிறைவேறிய முக்கிய ‘தேர்தல்’ சட்ட மசோதா.! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.! 

Election Commission of India - Winter session of Parliament

தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மற்ற உயர் தேர்தல் அதிகாரிகளை நியமிக்கும் குழுவில்  பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் இருக்க வேண்டும் என்று இந்த ஆண்டு தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. ஆனால் அதனை மறுத்து, மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்றி உள்ளது.

புதிய சட்டதிருத்தத்தின் படி, தேர்தல் உயர் அதிகாரிகளை நியமிக்கும் குழுவில், பிரதமர் , எதிர்க்கட்சி தலைவர் உடன் இந்திய தலைமை நீதிபதிக்கு பதில் மத்திய அமைச்சர் இடம் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

ஹலால் சான்றிதழ் .! பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து.! 

முதலில் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறியது. அப்போது காங்கிரஸ் எம்பி ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் இயந்திரத்தின் சுயாட்சி, அச்சமின்மை மற்றும் நேர்மை ஆகியவை இந்த புதிய மசோதாவால் நசுக்கப்பட்டுள்ளது என கடுமையாக விமர்சித்தார்.

மாநிலங்களவையை தொடர்ந்து இந்த சட்ட மசோதாவானது மக்களவையில் இன்று இந்த சட்டம் நிறைவேறியது. இந்த சட்டம் மீதான விவாதத்தின் போது, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பேசுகையில், 1991 ஆம் ஆண்டு தேர்தல் உயர் அதிகாரிகளின் பணி நிலைமைகள் குறித்த சட்டமானது முழுமையாக நிறைவேறவில்லை. முந்தைய சட்டத்தில் விடுபட்ட பகுதிகளை தற்போதைய மசோதா உள்ளடக்கியது என்றும் கூறினார்.

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக, நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடரில் இதுவரை 143 எம்பிக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனாலும், புதிய தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான சட்டமானது, பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
PMK MLA Metur Sadhasivam - BJP State president Annamalai
Yashasvi Jaiswal
PM Modi office
US President Donald trump
maruthamalai - murugan vel
tn rain