மத்திய அரசு சொல்லுவதற்க்கெல்லாம் நாங்கள் தலையாட்டுவதில்லை..!! தமிழக முதல்வர் ஆக்ரோஷம்…

சிதம்பரம் :
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிதம்பரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பொதுப்பணித்துறை சார்ந்த ஏரிகள், உள்ளாட்சித்துறை சார்ந்த ஏரிகள் ஆக மொத்தம் 40 ஆயிரம் ஏரிகள் இருக்கின்றன. இதில் பெரிய ஏரி, சிறிய ஏரி எல்லாம் இருக்கின்றன. பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் முழுமையும் சேமித்து வைக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில், குடிமராமத்து என்ற திட்டத்தை உருவாக்கிஅந்த பணியை துவக்கினோம், அது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை விவசாயிகள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்கள் என்று முதல்வர் கூறினார்.
இதைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நீங்கள் எதுவுமே செய்யவில்லை என்று எதிர்க் கட்சிகள் தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்களே?
பதில்:- இதற்கு முன்பு இந்த திட்டத்தை அவர்கள் கொண்டு வந்தார்களா? இல்லையே நாங்கள் கொண்டுவந்ததால் அவர்களால் பொறுக்க முடியவில்லை. ஏனென்றால், இது மிகவும் சிறப்பான திட்டம். இந்த திட்டம் மக்களிடமும் விவசாயிகளிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.இதையெல்லாம் பார்த்து அவர்களுக்கு பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
அவர்கள் காலத்தில் எந்தத் திட்டமும் செய்யவில்லையே, நாங்கள் தானே இந்தத் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். படிப்படியாக, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட அளவு ஏரியை தேர்ந்து எடுத்து, சீரமைக்கின்ற பணியை விவசாயிகளிடத்திலே கொடுத்து அந்த பணியை மேற்கொள்வோம். இதுவரைக்கும் டெண்டர் தான் விட்டார்கள். இதற்கு டெண்டர் கிடையாது, முழுக்க முழுக்க அந்த ஏரிக்குட்பட்ட பாசன விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மூலமாக இந்த குடிமராமத்து பணியை நாம் சிறப்பாக செயல்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.

 
கேள்வி:- மத்திய அரசு சொல்வதை மட்டும் தான் தமிழக அரசு செய்கிறது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் வருகிறதே?.
பதில்:- எதிர்க்கட்சியினர் எப்படி வேண்டுமானாலும் பேசலாம், எதிர்க்கட்சியினர் அப்படித்தான் பேசுவார்கள், எங்களை பாராட்டியா பேசப்போகிறார்கள்? கிடையாது. ஜெயலலிதா எப்படி பின்பற்றினார்களோ, அதை நாங்கள் பின்பற்றுகிறோம். எதை எதிர்ப்பாரோ, அதை எதிர்த்தோம். எல்லாவற்றிற்கும் நாங்கள் தலையாட்டுவது கிடையாது என்று முதல்வர் கூறினார்..
 
dinasuvadu  
author avatar
Dinasuvadu desk

Leave a Comment