எண்ணூர் எண்ணெய்க் கசிவு- மீன்வளத்துறை நிவாரணம் அறிவிப்பு..!

சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து கழிவு எண்ணெய் கசிந்து ஆற்றில் கசிந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த எண்ணெய் கசிவால் காட்டுக்குப்பம், சிவன் படை குப்பம், எண்ணுர் குப்பம், முகத்துவாரகுப்பம், தாழாங்குப்பம் கிராமங்களில் மீன்பிடி படகுகள் சேதம் அடைந்தன.

இப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் கசிவு தொடர்பாக தாமாக முன்வந்து பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வழக்கில் எண்ணூரில் எண்ணெய்க் கழிவால் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்க 8 கோடியே 68 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மீன்வளத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

787 படகுகளுக்கு தலா பத்தாயிரம் வீதம் 78. 70 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் வாழ்வாதாரம் பாதித்த 2301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 என ரூ.2 கோடியே 87 லட்சத்து 62 ஆயிரத்து 500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், வாழ்வாதாரம் பாதித்த மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதம் 6,700 குடும்பங்களுக்கு வழங்க 5 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்