மாநிலங்களவை தலைவர் விவகாரம்.! ராகுல்காந்தி விளக்கம்.!

Congress MP Rahul gandhi

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கரை அவமதித்ததாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது ஆளும்கட்சி நாடளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு ஆதரவாக ஆளுங்கட்சி எம்பிக்கள் ஒற்றுமையைக் காட்ட நாடாளுமன்றத்தில் பத்து நிமிடங்கள் நின்ற நிலையில் இருந்தனர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆகிய முக்கிய அமைச்சர்களும் இதில் கலந்து கொண்டு ஜகதீப் தன்கருக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிடுகையில், எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்தனர், அவர்களின் வீடியோவை நான் படம்பிடித்தேன். எனது வீடியோ எனது தொலைபேசியில் உள்ளது. ஊடகங்கள் அதை காட்டுகின்றன.

யாரும் எதுவும் கூறவில்லை. சுமார் 150 எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியியேற்றப்பட்டனர். ஆனால், அதுபற்றி நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெறவில்லை . அதானி பற்றிய விவாதமும் நாடாளுமன்றத்தில் இல்லை, ரஃபேல் பற்றிய விவாதமும் இல்லை, வேலையில்லாத் திண்டாட்டம் பற்றியும் விவாதம் இல்லை. எங்கள் எம்பிக்கள் மனமுடைந்து வெளியில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் வீடியோ பற்றி விவாதிக்கிறீர்கள் என ராகுல்காந்தி செய்தியாளர்கள் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்