நம்ம லெவலே வேற! சம்பளத்தை உயர்த்திய எஸ்.ஜே.சூர்யா!

S. J. Suryah

இயக்குனராக களமிறங்கி தற்போது நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் எஸ்.ஜே . சூர்யா. இவர் கடைசியாக நடித்த ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், மார்க் ஆண்டனி ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய வெற்றிபெற்றது. இந்த வெற்றிகளை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே . சூர்யா பல படங்களில் நடித்து பிஸியான நடிகராக வளம் வந்து கொண்டு இருக்கிறார்.

இப்படி தொடர்ச்சியாக தனக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதன் காரணமாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தி உள்ளாராம். அதன்படி, அவர் தற்போது ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக 9 கோடி வரை கேட்கிறாராம். முன்னதாக ஒரு படத்தில் நடிக்க 5 கோடி வரை அவர் சம்பளம் வாங்கி வந்ததாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

அம்மா கொடுத்த அட்வைஸ் கேட்டதால் அனிகாவுக்கு அடித்த ஜாக்பார்ட்!

அதனை தொடர்ந்து தற்போது அவர் சம்பளத்தை உயர்த்தி 9 கோடி வாங்கி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு இனிமேல் படங்களில் கால்ஷீட் கொடுக்கவும் அவர் தயாராக இல்லயாம். அந்த அளவிற்கு தொடர்ச்சியாக படங்களை குவித்து வைத்து இருப்பதால் இனிமேல் 2025 -ஆம் ஆண்டு பார்த்து கொள்ளலாம் என்று தன்னை தேடி வரும் தயாரிப்பாளரிடம் கூறுகிறாராம்.

மேலும், எஸ்.ஜே . சூர்யா தற்போது இந்தியன் 2 , கேம் சேஞ்சர், D50, LIC ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் LIC  திரைப்படத்தினை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். படத்தில் ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார் இதற்கான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. இந்த படங்கள் எல்லாம் போதாது என்று எஸ்.ஜே . சூர்யாவுக்கு தெலுங்கிலும் பட வாய்ப்புகள் வருகிறது. தெலுங்கில் சரிபோதா சனிவாரம் எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29032025
Kohli Angry On Khaleel
earthquake - helpline
C Voters survey -MK Stalin TVK Vijay EPS Annamalai
Hardik Pandya
TVK Leader Vijay - Edappadi palanisamy
Edappadi Palanisamy - Sengottaiyan