அரசியலில் பெண்கள் இருப்பது மிகப்பெரிய சவால்…! அதற்கு உதாரணம் இவர்தான்..! – பிரேமலதா

premalatha

நேற்று முன்தினம் தேமுதிக கட்சியின் 18வது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் விஜயாகநாத் அவர்கள் கலந்து கொண்டார். நீண்ட நாட்களுக்கு பின் விஜயகாந்தை நேரில் பார்த்ததால் தொண்டர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர்.

இந்த நிலையில், இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானமாக தேமுதிக கட்சி பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, தேமுதிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிரேமலதாவுக்கு  அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா அவர்கள், 2011 தேர்தலுக்கு பிறகு எம்.எல்.ஏக்கள் செய்த துரோகங்களால்தான் விஜயகாந்த்துக்கு சறுக்கல் ஏற்பட்டது, அதால் ஏற்பட்ட மன உளைச்சலில் உடல் நலமும் பாதிக்கப்பட்டது .

மூன்று மாநில தேர்தல் முடிவுகள் – எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது : முதல்வர் மு.க.ஸ்டாலின்

பொதுச்செயலாளராக நான் தேர்வானது திடீரென எடுத்த முடிவல்ல. கேப்டன் மனைவியாக என் வாழ்க்கையை தொடங்கினேன்; தற்போது பொதுச்செயலாளர் என்ற மிகப்பெரிய பொறுப்பை எனக்கு கேப்டன் கொடுத்துள்ளார் தொண்டர்களுக்கு அண்ணியாக மட்டுமில்லை, அன்னையாகவும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

விஜயகாந்தின் உத்தரவுப்படியே தேமுதிகவின் செயல்பாடுகள் எப்போதும் இருக்கும். அரசியலில் இருப்பதே சவால் தான். குறிப்பாக பெண்கள் இருப்பது மிகப்பெரிய சவால்.  அரசியலில் பெண்கள் இருப்பது மிகப்பெரிய சவால் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா தான்.

ஜெயலலிதா சந்திக்காத சவால்களே இல்லை , அதில் வெற்றியும் பெற்றுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் எனக்கு அரசியல் ரோல் மாடல். அவருடைய தைரியமும், தன்னம்பிக்கையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்