பற்களை பிடுங்கிய விவகாரம்.! பல்வீர் சிங்கிற்கு மாவட்ட நீதிமன்றம் ஜாமீன்.!
நெல்லை மாவட்ட முன்னாள் துணை காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐபிஎஸ் , அம்பை காவல் நிலையத்திற்கு உட்பட்ட குற்ற சம்பவங்களில் சந்தேகத்திற்கு இடமாக கருதப்படும் நபர்களை விசாரணை என அழைத்து பல்பிடுங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பெயரில் பல்வீர் சிங் மட்டுமல்லாது அம்பை காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவலர்கள் என மொத்தம் 15 காவலர்கள் மீது முதலில் 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
பெண்ணின் ஆடைகளை இழுத்தால் எந்த கிருஷ்ணனும் வரமாட்டான்… உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி.!
இந்த வழக்கானது நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சியம், அம்பை காவல் நிலையத்தில் நேரடி விசாரணை என பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி திருமேணி முன்னர் இன்று பல்வீர் சிங் நேரில் ஆஜரானார்.
அப்போது வழக்கில் இருந்து ஜாமீன் கோரி பல்வீர் சிங் உள்ளிட்ட 15 காவலர்களும் மனு அளித்து இருந்தனர். இன்று காலை துவங்கிய ஜாமீன் மனு மீதான விசாரணை மலை வரை பல்வேறு முறை ஒத்திவைக்கப்பட்டு. பின்னர் மாலை அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் வழங்க கூடாது என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது.