நெல்லையில் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய பெட்டிகளை கொண்ட இரயில்…!!
திருநெல்வேலி – சென்னை எழும்பூர் நெல்லை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை – சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களும் எல்.எச்.பி., பெட்டிகள் கொண்ட ரயில்களாக மாற்றம் செய்யப்பட இருக்கிறது.இந்த இரண்டு இரயில்களும் இனிமேல் ஜெர்மன் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட எல்.எச்.பி. பெட்டிகள் கொண்ட ரயிலாக மாற்றம் செய்யப்பட இருக்கிறது.
ஜெர்மன் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த வகை பெட்டிகளின் எடை 52 டன்னுக்கும் குறைவானது என்பதால், மணிக்கு 160 கிமீ வேகத்துடன் இந்த ரயில் பெட்டிகளை எளிதாக இயக்க முடியும். பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட இந்த பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது என்பதும், விபத்து நேரங்களில் எளிதாக கவிழ்ந்து விடாமல் தப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறைவான சத்தத்தை மட்டுமே எழுப்பக்கூடிய பயணி பெட்டிகள்என்பதால் இனிமேல் ரயில் பயணிகளுக்கு கூடுதல் அமைதியை வழங்க கூடியதாகவும் இந்த வகை பெட்டிகள் அமைந்துள்ளன. தற்போது தென்மாவட்டங்களிலிருந்து இயக்கப்படும் ரயில்கள் எல்.எச்.பி., பெட்டிகள் கொண்ட ரயிலாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
DINASUVADU