தன்னை போலவே இருக்கும் AI மாடல்.! அதிர்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின்.!

Vladimir Putin

AI தொழில்நுட்பம் பல துறைகளில் சாதனைகளைப் படைத்திருந்தாலும், சில இடங்களில் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. அதிலும் டீப்ஃபேக் (Deep fake) என்ற AI தொழில்நுட்பம் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த ஏஐ, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தெரிகிற ஒருவரின் முக ஜாடையை அப்படியே மற்றொருவரை போல மாற்றிவிடும் திறனை கொண்டுள்ளது.

டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் பல பிரபலங்களின் டீப்ஃபேக் விடீயோக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ரஷ்யாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பொதுமக்களுடனான செய்தியாளர் சந்திப்பின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடன் செயற்கை நுண்ணறிவு மற்றும் அதன் ஆபத்துகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் புதினிடம் இந்த கேள்வியைக் கேட்டது, அவரைப் போலவே தோற்றம் மற்றும் அவரைப்போன்ற குரலைக் கொண்ட AI மாடல் ஆகும். அந்த ஏஐ மாடல் வீடியோ வாயிலாக புதினைத் தொடர்புக்கொண்டது. இந்த புதிய வீடியோ சமீக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

புதினிடம் கேள்வி கேட்ட அந்த AI மாடல், தன்னை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவன் என அறிமுகம் செய்து கொண்டது. பிறகு “உங்களிடம் நிறைய இரட்டையர்கள் இருப்பது உண்மையா? செயற்கை நுண்ணறிவு மற்றும் நியூரல் நெட்வொர்க்குகள் நம் வாழ்வில் கொண்டு வரும் ஆபத்துகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டது.

அதற்கு பதிலளித்த விளாடிமிர் புதின், “நீங்கள் என்னைப் போலவும் என் குரலில் பேசுவதையும் நான் பார்க்கிறேன். ஆனால் ஒரு நபர் மட்டுமே என்னைப் போல இருக்க வேண்டும். என் குரலில் பேச வேண்டும். அது நானாக இருக்க வேண்டும். சொல்லப்போனால், இதுதான் என்னுடைய முதல் இரட்டை.” என்று கூறினார்.

முன்னதாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின், மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாகவும், மாஸ்கோவிற்கு வடக்கே வால்டாயில் உள்ள அவரது இல்லத்தில் இரவு உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. அந்த நேரத்தில் புதினை போல தோற்றமளிக்கும் ஒருவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்