உங்க கல்லீரலை புதுசா வச்சுக்கணுமா?அப்போ இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க…!

liver protection

liver protection-நம் உடலின் முக்கிய உறுப்புகள் செயல்பட கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது  மிக அவசியம். பெரும்பான்மையான மக்களுக்கு இந்த கல்லீரல் பாதிப்பு உள்ளது இது பல காரணங்களால் ஏற்படுகிறது. அந்த காரணங்கள்மற்றும்  எவ்வாறு கல்லீரலை பாதுகாப்பாக  வைத்துக் கொள்வது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கல்லீரல் பாதிப்பு ஏற்பட காரணங்கள்:

கல்லீரல் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருப்பது மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. மேலும் குறைவான உடல் உழைப்பு உள்ளவர்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு பொதுவாக எடுக்கக்கூடிய பாராசிட்டமால் மாத்திரை வகைகள் அதிக அளவு பயன்படுத்துவது இதனாலும் கல்லீரல் பாதிப்படையலாம். ஆனால் வருடத்திற்கு ஒரு முறையாவது கல்லீரல் ஊக்க சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே கல்லீரல் நோய் கண்டறியப்பட்டிருந்தாலும் இந்த மருத்துவ குறிப்புகளை பின்பற்றலாம்.

கரிசலாங்கண்ணி :

எல்லா இடங்களிலும் பரவலாக காணப்படக்கூடிய ஒரு மூலிகை இந்த கரிசலாங்கண்ணி, இது இரண்டு வகையில் உள்ளது மஞ்சள் கரிசலாங்கண்ணி மற்றும் வெள்ளை கரிசலாங்கண்ணி என்று உள்ளது. ஒரு காலகட்டத்தில் கரிசலாங்கண்ணியை பயன்படுத்துவதற்கும் பயிர் இடுவதற்கும் மன்னர்களுக்கு வரி கட்ட வேண்டிய நிலை இருந்த ஒரு மிக முக்கிய மூலிகையாக இருந்தது இந்த கரிசலாங்கண்ணி தான். ஆனால் இன்றைக்கு பரவலாக அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது. கல்லீரலை புதுப்பிக்க ஒரு அற்புதமான மூலிகையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது

பயன்படுத்தும் முறை:

கரிசலாங்கண்ணியை இலையை  மட்டும் எடுத்து அரைத்து 30 மில்லி அளவு சாரை 7 முதல் 21 நாட்கள் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.

ஏழு வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஐந்து மில்லி  அளவும் ஏழு முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 10 மில்லி அளவும் கொடுக்கலாம்.

இதனால் ஏற்படும் நன்மைகள்:

உடல் சூடு தணியும். ரத்தத்தில் அமிலத்தன்மை குறையும் .கல்லீரல் பாதிப்பினால் ஏற்படும் ரத்த சோகை குணமாகும். கல்லீரல் வீக்கம் குணமாகும். குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட கல்லீரல் இசிவு நோய்க்கு மிக அற்புதமான மாற்றத்தை கொடுக்கக் கூடியது கரிசலாங்கண்ணி.

இதை மற்றொரு வகையிலும் பயன்படுத்தலாம் இலையை பறித்து நிழலில் உலர்த்தி பொடி செய்து 5 – 10 கிராம் அளவு பொடியும் சம அளவு தேனுடன் கலந்து 7- 21 நாட்கள் பயன்படுத்தி வந்தால் மிக அற்புத கல்லீரலை புதுப்பிக்கலாம்

சமையலில் கரிசலாங்கண்ணி:

வாரத்தில் இரண்டு நாட்களாவது கரிசலாங்கண்ணியின் இலைகளை பறித்து கீரையாக சமைத்து எடுத்துக் கொண்டால் நல்ல பயன்களை பெறலாம் எனவே நம் கண்ணீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் அதனுடன் தொடர்புடைய கண் சம்பந்தப்பட்ட நோய்களும் நம்மை தாக்காமல் காத்துக் கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்