குடும்ப சண்டையால் கர்ப்பிணி பெண் தற்கொலை..!! கணவர் கைது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அருகே நாகம்பாறைவிளையை சேர்ந்த விபின் (26). இவருடைய மனைவி அனிலா (23). இவர்கள் காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர் . சம்பவத்தன்று இவர்கள் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு அது அடி உதையாக மாறியது.பின்பு விபின் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றார்.இதனால் மனமுடைந்த அனிலா தன்னுடைய உடலில் தீ வைத்துக் கொண்டு இறந்து போனார்.
அதை தொடர்ந்து அனிலாவின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.ஆனால் அனிலாவை தற்கொலைக்கு துாண்டியதாக விபினை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்…
கர்பிணி பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது..
DINASUVADU