மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த 4 பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் விதித்து உத்தரவு..!
நாடளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வார திங்கள் கிழமை முதல் துவங்கி நடைபெற்று வந்த நிலையில், பாராளுமன்ற பார்வையாளர்கள் கேலரியில் இருந்த ஒரு பெண் , ஒரு ஆண் என இரு நபர்கள் மக்களவையில் பாதுக்காப்பு அரண் மீறி உள்ளே நுழைந்தனர். கையில் வைத்து இருந்த மஞ்சள் நிற வண்ணப்புகை வீசும் ஒரு வகை பட்டாசை வீசினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உண்டானது.
உடனே சுத்தரித்து கொண்ட பாதுகாவலர்கள் அவர்களை உடனடியாக கைது செய்து வெளியே அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிராவை சேர்ந்த சாகர் சர்மா, டி.மனோரஞ்சன் என்பவர்கள் நடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவையில் உள்ளே குதித்து கோஷங்களை எழுப்பினர்.
எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயகத்தை சஸ்பெண்ட் செய்ததற்கு ஒப்பானது – மல்லிகார்ஜுனே கார்கே
நாடளுமன்ற வளாகத்தில் வெளியே ஹரியானவை சேர்ந்த நீலம் என்ற பெண் உட்பட 2 பேர் கைது செய்ப்பட்டனர். அப்போது அப்பெண் நாங்கள் எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் இல்லை. மத்திய அரசு எங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. எங்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துகிறார்கள். சிறையில் அடைக்கிறார்கள். எங்கள் மீது கவனத்தை திருப்பி எங்கள் கருத்தை கேட்க வேண்டும் என்றே இவ்வாறு செய்தோம் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக கைதான 4 பேரையும், 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறைக்கு பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், டெல்லி காவல்துறை நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்தது திட்டமிட்ட சதிச்செயல் என தெரிவித்துள்ளனர்.