அஜித் காலை கழுவினால் தான் அந்த நடிகர்களுக்கு புத்தி வரும்…!!! பிரபல நடிகையின் சர்ச்சையான பதிவு :
தல அஜித்துக்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் பலரும் அஜித் ரசிகர்கள் என்று வெளிப்படையாக கூறி பார்த்திருக்கிறோம்.
தற்போது பிரபல நடிகை மீனா வாசு என்பவர் இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டுள்ள பதிவில் அஜித் பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார். மேலும் மற்ற நடிகர்கள் அவர் காலை கழுவி தொட்டு வணங்கினால் தான் அவரது குணம் 10 சதவீதமாவது கிடைக்கும் என கூறியுள்ளார். மீனா வாசு விசுவாசம் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார்.
ஒரு ஹிட் கிடைத்துவிட்டால் உடனே பில்ட்அப் கொடுக்கும் நிலையில் அஜித் இப்படி பணிவாக எளிமையாக இருப்பது ஆச்சர்யமாக இருப்பதாக கூறியுள்ளார்.