ஒரேநாளில் கனிமொழி உட்பட 15 எம்பிக்கள் சஸ்பெண்ட்… மக்களவையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

MPs suspended

நடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவைக்குள் நேற்று அத்துமீறி உள்ளே நுழைந்த சிலர் கோஷங்களை எழுப்பி, தங்கள் கைகளில் இருந்த வண்ண புகை குப்பிகள் வீசினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்றது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்று, ஹரியானவை சேர்ந்த நீலம் என்ற பெண் உட்பட 2 பேர் கைது செய்ப்பட்டனர்.

இந்த சூழலில், மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொத்து கொத்தாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர். அதாவது, இன்று ஓரே நாளில் 15 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில், தமிழ்நாட்டில் இருந்து பிஆர் நடராஜன், கனிமொழி, சுப்புராயன், எஸ் ஆர் பார்த்திபன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற அத்துமீறல்.! 8 பேர் சஸ்பெண்ட்.. முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் தீவிர ஆலோசனை.!

இவர்களை தவிர மற்ற எம்பிக்கள் பென்னி, விகே ஸ்ரீகண்டன், முகமது ஜாவித் உள்ளிட்ட 6 க்கும் மேற்பட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற மக்களவையில் அமர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்ட 15 எம்பிக்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், போராட்டம் நடைபெற்று வருகிறது. வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் என முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர் அமளியில் ஈடுபட்டதால் ஒரே நாளில் 15 எம்எல்க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்