போட்றா வெடியா …!!!அஜித்தின் அடுத்தக்கட்ட விசுவாச படப்பிடிப்பு இங்கு தான் நடக்கிறதா…?
சிவா இயக்கும் விசுவாசம் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அஜித்தின் விவேகம் படம் சரியாக போய் சேரவில்லை என்பதே உண்மை. இதனால் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் விசுவாசம் படத்திற்க்காக வெய்டிங்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்ததில் இருந்து இருக்கின்றனர். படமும் வரும் பொங்கலுக்கு வர இருக்கிறது. மதுரை,தேனியை மையமாக கொண்ட இப்படத்தில் அஜித் 2 வேடத்தில் நடிக்கிறார் என்பதே ஸ்பெஷல் தான்.
இது நாள் வரை ஹைதராபாத்தில் நடந்து வந்த படப்பிடிப்பு, அடுத்த கட்டமாக சென்னையில் நடக்க இருக்கிறதாம். இதில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.