ஃபைட் கிளப் படத்தை பார்க்க குவிந்த சினிமா பிரபலங்கள்!
உறியடி படத்தை இயக்கி நடித்ததன் மூலம் பிரபலமான விஜய் குமார் தற்போது லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான அப்பாஸ் ஏ. ரஹ்மத் சசி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “ஃபைட் கிளப்”. இந்த திரைப்படத்தில் மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், அவினாஷ் ரகுதேவன், சரவண வேல் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ஜி ‘g squad ‘ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்குகிறார். இந்த படத்திற்கான ட்ரைலர் எல்லாம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனால் இந்த திரைப்படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பும் அதிகமானது.
10 நிமிட குறும்படம் இருக்கு! அது தான் LCU-வின் தொடக்கம்- நடிகர் நரேன்!
இந்த “ஃபைட் கிளப்” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மும்மரமாக நடைபெற்று கொண்டி வருகிறது. படத்தின் பிரீமியர் காட்சிகள் சமீபத்தில் திரையரங்குகளில் பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு போடபட்டுள்ளது.
அதில் படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் பலரும் படம் நன்றாக இருப்பதாக கூறி வருகிறார்கள். அந்த வகையில், சென்னையில் உள்ள பி.வி.ஆர்.சத்தியம் திரையரங்கில் படத்தை பார்க்க எஸ்.ஜே.சூர்யா, பிரதீப் ரங்கநாதன், லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், சாந்தனு, நெல்சன், உள்ளிட்ட பல பிரபலங்கள் படத்தை பார்க்க வந்து இருக்கிறார்கள். படத்தை பார்த்துவிட்டு இவர்கள் தங்களுடைய விமர்சனங்களை கூறுவார்கள் என கூறப்படுகிறது.