ஒரே நாளில் விண்ணை தொட்ட தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன?

gold

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது இந்த வார தொடக்க நாளில் இருந்து தொடர்ந்து, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், இன்று ஒரே நாளில் ரூ.960 அதிகரித்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று (14.12.2023)  இன்று முகூர்த்த நாள் என்பதால், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.46,560க்கும்  கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.5.820க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளி ரூ.2.50 உயர்ந்து ரூ.79.50க்கும். கிலோ வெள்ளி ரூ.2500 உயர்ந்து ரூ.79,500க்கும் விற்பனையாகிறது

மிக்ஜாம் புயல் பாதிப்பு.! 4 மாவட்ட மின் கட்டணம் எவ்வளவு.? வெளியான முக்கிய தகவல்…

சென்னையில் நேற்று (13.12.2023) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,600க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5700க்கும் விற்பனையானது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 70 காசு குறைந்து ரூ.77க்கும், கிலோ வெள்ளி ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
putin
Suriya
Pollachi Sexual Assault case
edappadi palanisamy rs bharathi
Supreme court - Senthil Balaji
suryakumar yadav vk orange cap