ஜன்னல் கண்ணாடி உடைப்பு… மன்னிப்பு கேட்ட ரிங்கு சிங்!
தென்னைப்பிரிக்கா – இந்தியா இடையேயான 2வது டி20 போட்டி செயின்ட் ஜார்ஜ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டிஎல்எஸ் முறைப்படி தென்னாபிரிக்கா அணி 13.5 ஓவரில் 154 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரிங்கு சிங் பேட்டிங்கில் இறங்கிய போது இந்திய அணி 55/3 என்ற நிலையில் இருந்தது.
பின்னர் நிதானம் மற்றும் அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் ஆட்டமிழக்காமல் இரண்டு சிக்ஸர்ஸ் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 68 ரன்களை விளாசினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை ரிங்கு சிங் பதிவு செய்தார். இதில், குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் கேப்டன் மார்க்ரம் வீசிய 19வது ஓவரில் அடுத்தடுத்து பிரமாண்ட சிக்ஸர்கள் அடித்து விளாசினார்.
பிரமாண்ட சிக்ஸர்… ஜன்னல் கண்ணாடியை உடைத்த இந்திய வீரர் ரிங்கு சிங்!
அப்போது, அந்த பந்து ஸ்டேடியத்தில் இருந்த ஊடக அறையின் மீது விழுந்ததில் அறையின் கண்ணாடி நொறுங்கியது. எனவே, ரிங்கு சிங் அடித்த அந்த சிக்ஸரின் வீடியோ மற்றும் உடைந்த கண்ணாடியின் புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்றைய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சிக்ஸர் மூலம் ஜன்னல் கண்ணாடி உடைத்ததுக்கு இந்திய இளம் வீரர் ரிங்கு சிங் மன்னிப்பு கேட்டுள்ளார். போட்டிக்குப் பிறகு, தோல்வி மற்றும் போட்டி குறித்து இந்தியர்கள் பேசியுள்ள வீடியோவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ரிங்கு சிங்கிடம் ஜன்னல் கண்ணாடி உடைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது, நான் சிக்ஸ் அடித்த அந்த பந்து, மீடியா ரூம் மீது விழுந்து கண்ணாடி உடைந்தது கூட எனக்கு தெரியாது. மீண்டும் டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்றபோதுதான் இந்த விஷயம் குறித்து எனக்கு தெரிந்தது. அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என புன்னகையுடன் தெரிவித்தார்.
Maiden international FIFTY ????
Chat with captain @surya_14kumar ????
… and that glass-breaking SIX ????@rinkusingh235 sums up his thoughts post the 2⃣nd #SAvIND T20I ???????? #TeamIndia pic.twitter.com/Ee8GY7eObW— BCCI (@BCCI) December 13, 2023