வெறும் ரூ.6,000 பட்ஜெட்.. 4 ஜிபி ரேம்.. 4,000mAh பேட்டரி.! ஐடெல் A05s ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

itel a05s

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஐடெல் (Itel), சமீபத்தில் A சீரிஸில் ஐடெல் A05s (Itel A05s) என்கிற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதில் ஆரம்பத்தில் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் மட்டுமே அறிமுகமானது. இப்போது ஐடெல் A05s போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டை வெளியிட்டுள்ளது.

மேலும், இதில் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐடெல் A05s இல் இருக்கக்கூடிய 5 எம்பி கேமரா அமைப்பிற்குப் பதிலாக, 8 எம்பி பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. கிரிஸ்டல் ப்ளூ, குளோரியஸ் ஆரஞ்சு, மெடோ க்ரீன் மற்றும் நெபுலா பிளாக் ஆகிய  நான்கு வெவ்வேறு வண்ணங்களில் உள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகிறது Lava Yuva 3 Pro.! எப்போது தெரியுமா.?

இதில் 4G LTE, ப்ளூடூத், 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இதன் பின்புறத்தில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சம் உள்ளது. இதன் ஸ்டோரேஜை 1 டிபி வரை உயர்த்த முடியும். பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜை பயன்படுத்தி ரேமை கிட்டத்தட்ட 8 ஜிபி வரை விரிவாக்க முடியும்.

புதிய ஐடெல் A05s அம்சங்கள்

  • 6.6 இன்ச் எச்டி+ டிஸ்பிளே, 1600 x 720 பிக்சல் ரெசல்யூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட்
  • யூனிசோக் ஆக்டா கோர் பிராஸசர்
  • 8 எம்பி ரியர் கேமரா
  • 5 எம்பி செல்ஃபி கேமரா
  • 4,000mAh பேட்டரி
  • 4 ஜிபி ரேம்
  • 64 ஜிபி ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் ஓஎஸ்

ஐடெல் A05s இன் 2 ஜிபி ரேம் வேரியண்ட் இந்தியாவில் ரூ.6,499 என்ற விலையில் வெளியிடப்பட்டது. ஆனால் புதிய 4ஜிபி ரேம் வேரியண்ட் இப்போது ரூ.6,099 என குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட் இந்தியாவில் உள்ள முக்கிய சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்