விஜய் சேதுபதியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு கைகொடுத்த சித்தார்த்.!

Ayalaan -Siddharth

நடிகர் சிவகார்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தினை இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். சிவகார்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று 90 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் வெளியாக உள்ளது.  பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, பால சரவணன், பானுப்ரியா, கருணாகரன், இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

குஷ்பு மேலே சாய்ந்திருக்கும் பர்த்டே பாய் யார் தெரியுமா.?

ஏலியன் நம்மளுடைய உலகத்திற்கு வந்தால் என்ன நடக்கும் என்பதனை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, அந்த ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். இதற்கு முன்னதாக, சிவகார்திகேயன் நடித்துள்ளாள் மாவீரன் படத்திற்கு விஜய் சேதுபதி கடவுள் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்திருந்தார். அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து.

என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே! நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்!

இதற்கிடையில், நடிகர் சித்தார்த் நடித்த தெலுங்லு திரைப்படமான ‘ஓ மை பிரண்ட்’ படத்தில் சித்தார்த்துக்கு தமிழ் டப்பிங் பேசியுள்ளார். அந்த ஒரு காரணத்திற்காகவும், அயலான் படத்தில் சித்தார்த் ஏலியனுக்கு குரல் கொடுக்க வந்துள்ளார் என்றே சொல்லலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS FEB 27
thirumavalavan VCK
vinnaithandi varuvaya
european union donald trump
England players get emotional
Shivaratri