ஆதரவளித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! அமீர் அறிக்கை!

Suriya and Ameer

இயக்குனர் அமீர் தமிழ் சினிமாவில் சூர்யாவை வைத்து ‘மௌனம் பேசியதே’ படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர். இந்த திரைப்படம் இதே தினத்தில் (டிசம்பர் 13)-ஆம் தேதி தான் 2002-ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் த்ரிஷா, நந்தா துரைராஜ், அஞ்சு மகேந்திரன், நேஹா பென்ட்சே, விதார்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய ஹிட் ஆனது. இந்நிலையில், இந்த படம் வெளியாகி இன்றுடன் 21-ஆண்டுகள் ஆகி இருக்கும் நிலையில், மௌனம் பேசியதே படம் குறித்தும் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்து அமீர் அறிக்கை ஒன்றை எழுதி இருக்கிறார்.

நான் பெற விரும்புவது யாசகம் அல்ல என்னுடைய உரிமையை! இயக்குனர் அமீர் அறிக்கை!

அந்த அறிக்கையில் அமீர் கூறிருப்பதாவது ” கடந்த ஒரு மாதத்திற்கு முன் என்னை வீழ்த்துவதற்காக அவதூறுகளையும், அவமானங்களையும் பொதுவெளியில் எனக்கு சிலர் அன்பளிப்பாக கொடுத்த போது, நான் சோர்ந்துவிடாமலும் துவண்டுவிழாமலும் பார்த்துக் கொள்ளும் விதமாக எனக்கு தன்னம்பிக்கையையும், அன்பையும், ஆதரவையும் எதிர்பாராத அளவிற்கு எனக்களித்த தமிழக ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் ஊடகத் துறையினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஒரு இயக்குனராக எனக்கு அடையாளத்தைப் பெற்று தந்த என்னுடைய முதல் திரைப்படம் “மௌனம் பேசியதே” வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இந்த நெகிழ்வான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
சென்னையை நோக்கி – சினிமாவை நோக்கி படையெடுத்து வந்த எல்லோரது கன நனவாவது இல்லை.

அப்படி கனவுகளை சுமந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவ இருந்த என்னை கரம் பிடித்து உயர்த்தி என்னுடைய திரைக்கனவை நனவாக்கிய, “மௌனம் பேசியதே” திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் கணேஷ் ரகு , வெங்கி நாராயணன் உள்ளிட்ட அபராஜித் ஃபிலிம்ஸ் நிறுவனத்தாருக்கு என்னோடு பயணித்து திரைப்படத்தின் வெற்றிக்கு கரம் கொடுத்த சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்ட நடிகர் நடிகைகளுக்கும், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைத்துறை தொழிலாளர்களுக்கும் என் நன்றிகள்.

எனக்கு சூர்யாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை! மனம் திறந்த இயக்குனர் அமீர்!

என்னுடைய திரைப்பயணம் தொடங்கிய இந்த 21 ஆண்டுகளில், நான் இயக்கிய படங்கள் குறைவாக இருந்தாலும் இன்னும் என்னை மனதில் நிறுத்தி தொடர்ந்து சமூக வலைதளங்களில், ஊடகங்களில் ஆதரவு தந்து கொண்டிருக்கிற திரை ரசிகர்களுக்கும், ஊடக – பத்திரிகை நண்பர்களுக்கும், தமிழக மக்களுக்கும் குறிப்பாக “மௌனம் பேசியதே” ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என கூறியுள்ளார்.

மேலும் இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், அதனை குறிப்பிட்டு தான் தற்போது இயக்குனர் அமீர் ” கடந்த ஒரு மாதத்திற்கு முன் என்னை வீழ்த்துவதற்காக அவதூறுகளையும், அவமானங்களையும் பொதுவெளியில் எனக்கு சிலர் அன்பளிப்பாக கொடுத்தார்கள்” என கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்