பரபரப்பை கிளப்பிய அந்த மாதிரி வீடியோ! விளக்கம் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

lokesh kanagaraj

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வந்துகொண்டு இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் ட்வீட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதள பக்கங்களில் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்து இருக்கிறார். ஆனால், அவர் பேஷ் புக்கில் அதிகாரப்பூர்வமாக கணக்கு வைக்கவில்லை. இருந்தாலும்,  அவருடைய பெயரில் இருந்த ஃபேஸ்புக் பக்கத்தில் பின் தொடர்போர் மட்டும் 4 லட்சத்திற்கு மேல் இருந்தார்கள்.

அது உண்மையில் லோகேஷ் கனகராஜுடைய பேஷ் புக் பக்கம் தானா என்பது குறித்து அவர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க கூட  இல்லை. இதனையடுத்து, அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று காலையில் இருந்து அந்த  ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து தவறான வீடியோக்கள் வந்துகொண்டு இருக்கிறது.

இந்த காரணத்தால 13 படங்களை நான் விட்டுட்டேன்! பப்லு வேதனை!

பிறகு, லோகேஷ் கனகராஜின் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள்  ஹேக் செய்துவிட்டார்கள் எனவும்,  ஹேக் செய்த அந்த நபர்கள் தான் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் Viral Yoga  என்று பெயரை மாற்றம் செய்து அதில் தவறான வீடியோக்களை வெளியீட்டு வருகிறார்கள் என கூறப்பட்டது.  ஆனால், தற்போது லோகேஷ் கனகராஜ் தான் நான் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மட்டுமே இருப்பதாகவும் வேறு எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லை என அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ”  வணக்கம், நான் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மட்டுமே இருக்கிறேன், வேறு எந்த சமூக ஊடக கணக்குகளும் என்னிடம் இல்லை . தயவு செய்து என்னுடைய பெயரில் இருக்கும் போலியான கணக்குகளை பின் தொடரவேண்டாம்” என அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர் பேஷ்புக் பக்கத்தில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Lokesh explained about social media
Lokesh explained about social media / @Lokesh Kanagaraj

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்