களத்தில் அவமரியாதை? இந்திய கேப்டனின் விக்கெட்டுக்கு பின் ஷூவை எடுத்து கொண்டாடத்தில் ஈடுபட்ட ஷம்சி!
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 19.3 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 180 ரன்கள் எடுத்தது. பின்னர் மழை குறுக்கிட்டதால் போட்டி டக்வொர்த் – லூயிஸ் முறைப்படி 15 ஓவராக குறைக்கப்பட்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு 152 இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 13.5 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, இந்திய பேட்டிங் செய்தபோது, கேப்டன் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை எடுத்த தென்னாபிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி தனது காலில் இருந்த ஷூவை எடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
அதாவது, தென்னாப்பிரிக்க அணியின் சுழற் பந்துவீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை வீழ்த்திய பின் ஷூவை எடுத்து போன் செய்வது போல சைகை செய்தது அவரை அவமரியாதை செய்வது போல இருந்தது. இதற்கு முன்பு ஒரு முறை பாகிஸ்தான் வீரருக்கு எதிராக ஷம்சி ஷூவை கழற்றி இதுபோன்று செயலில் ஈடுபட்டது சர்ச்சையை கிளப்பியது.
ஐசிசி U19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை.. இந்தியா உட்பட 5 அணி வீரர்கள் அறிவிப்பு!
தற்போது இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை எடுத்துவிட்டு மீண்டும் அதே போன்ற ஒரு செயலை செய்து இருக்கிறார் ஷம்சி. இதை பார்த்த போது கேப்டன் சூர்யகுமாரை அவமரியாதை செய்கிறாரா? என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பலர் ஷம்சிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இப்போட்டிக்கு பிறகு அதுபோன்ற கொண்டாட்டாட்டம் ஏன் என்ன பேசிய ஷம்சி, நான் அதுபோன்ற கொண்டாட்டத்தை நிறுத்தி வைத்திருந்தேன். ஆனால், குழந்தைகள் விக்கெட் எடுத்தபிறகு அந்த மாதிரி செய்யும்படி தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களை என்னால் ஏமாற்ற முடியவில்லை. அதனால்தான் அப்படி செய்தேன். விளையாட்டில் என்னுடைய வேலை சரியான இடத்தில் தொடர்ந்து பந்தை வீசுவது தான். இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி. சூரியகுமார் மிகச் சிறந்த வீரர் என தெரிவித்தார்.
— Bangladesh vs Sri Lanka (@Hanji_CricDekho) December 12, 2023