ஐசிசி U19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை.. இந்தியா உட்பட 5 அணி வீரர்கள் அறிவிப்பு!

U19WorldCup

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆண்கள் உலகக் கோப்பை அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஜனவரி 19ம் தேதி முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, ஐசிசி U19 ஆண்கள் உலகக் கோப்பை தொடருக்கான முழு அட்டவணையை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

U19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று, ப்ளே ஆஃப் சுற்று, சுப்பர் 6 சுற்று, அரையிறுதி மற்றும் இறுதி போட்டி என மொத்தம் 41 போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

நடப்பு சாம்பியனான இந்தியா, வங்கதேசம், அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன. இதுபோன்று, ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய அணிகள் குரூப் சி பிரிவிலும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, நேபாளம் குரூப் டி பிரிவிலும் உள்ளனர்.

2-வது டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி..!

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆண்கள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியாக ஜனவரி 20ஆம் தேதி வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி தென் ஆப்பிரிக்காவின் ப்ளூம்ஃபோன்டைன் நகரின் மங்காங் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சூழலில், ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளில் 5 அணிகள் தங்களது வீரர்களை அறிவித்துள்ளது.

2024 ICC U19 ஆண்கள் உலகக் கோப்பைக்கான அணி விவரங்கள்:

இந்தியா: அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரா மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியான்சு மோலியா, முஷீர் கான், உதய் சஹாரன் (கேப்டன்), ஆரவெல்லி அவனிஷ் ராவ் (WK), சௌமி குமார் பாண்டே (துணை கேப்டன்), முருகன் அபிஷேக், இன்னேஷ் மகாஜன் (WK), தனுஷ் கவுடா , ஆராத்யா சுக்லா, ராஜ் லிம்பானி மற்றும் நமன் திவாரி.

இங்கிலாந்து: பென் மெக்கின்னி (கேப்டன்), லக் பென்கன்ஸ்டைன் (துணை கேப்டன்), ஃபர்ஹான் அகமது, தசீம் அலி, சார்லி அலிசன், சார்லி பர்னார்ட், ஜாக் கார்னி, ஜெய்டன் டென்லி, எடி ஜாக், டொமினிக் கெல்லி, செபாஸ்டியன் மோர்கன், ஹேடன் கடுகு, ஹம்சா ஷேக், நோவா தைன் மற்றும் தியோ வைலி.

தென்னாப்பிரிக்கா: டேவிட் டீகர் (கேப்டன்), எசோசா ஐஹெவ்பா, ஜுவான் ஜேம்ஸ், மார்ட்டின் குமாலோ, க்வேனா மபாகா, திவான் மரியாஸ், ரிலே நார்டன், நகோபானி மொகோய்னா, ரொமாஷன் பிள்ளை, சிஃபோ பொட்சேன், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ரிச்சர்ட் செலட்ஸ்வான், செயின்ட் வைட்ஹெட், ஆலிவர் வைட்ஹெட், மற்றும் என்டாண்டோ ஜுமா ஆகியோர் இடமபெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியா: லாச்லன் ஐட்கன், சார்லி ஆண்டர்சன், ஹர்கிரத் பஜ்வா, மஹ்லி பியர்ட்மேன், டாம் கேம்ப்பெல், ஹாரி டிக்சன், ரியான் ஹிக்ஸ், சாம் கான்ஸ்டாஸ், ரஃபேல் மேக்மில்லன், ஐடன் ஓ’கானர், ஹர்ஜாஸ் சிங், டாம் ஸ்ட்ரேக்கர், கால்லம் விட்லர், கோரி வாஸ்லி, ஹக் வெய்ப்ஜென்.

நமீபியா: அலெக்ஸ் வோல்சென்க் (கேப்டன்), கெர்ஹார்ட் ஜான்ஸ் வான் ரென்ஸ்பர்க், ஹன்சி டி வில்லியர்ஸ், ஜேடபிள்யூ விசாகி, பென் ப்ராஸ்ஸல், ஜாக் பிரஸ்ஸல், ஹென்றி வான் வைக், ஜாக்கியோ வான் வூரென், நிகோ பீட்டர்ஸ், ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், வூட்டீ நிஹாஸ், ஹன்ரோ பேடன்ஹார்ஸ்ட், ஹான்ரோ பேடன்ஹார்ஸ்ட் ஜூனியர் கரியாட்டா, ரியான் மொஃபெட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்