அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து – கமல்ஹாசன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக தனுஷ், குஷ்பூ, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் ரஜினிகாந்திற்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
அவர்களை தொடர்ந்து தற்போது நடிகரும், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான கமல்ஹாசன் தற்போது ரஜினிகாந்திற்கு தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் “அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
ஒன்லி ஒன் சூப்பர் ஒன்! இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள்!
அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இருவரும் இணைந்து 16 வயதினிலே, அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், அவள் அப்படித்தான், இளமை ஊஞ்சல் ஆடுகிறது, தப்பு தாளங்கள், ஆடு புலி ஆட்டம், வயசு பிலிச்சிண்டி, உருவங்கள் மறலம், உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.