ரெடியா இருங்க..இந்தியாவில் களமிறங்கும் போகோ சி65.! எப்போ தெரியுமா.?
கடந்த நவம்பர் 6 தேதி போகோ (POCO) நிறுவனம் அதன் சி-சீரிசில் போகோ சி65 (POCO C65) என்கிற பட்ஜெட் ஸ்மார்ட்போனை உலக அளவில் அறிமுகம் செய்தது. இப்போது அதன் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளது. அதில் போகோ சி65 போனின் இந்திய அறிமுகத்தை உறுதிசெய்து வெளியீட்டு தேதியை டீஸர் படத்துடன் அறிவித்துள்ளது.
அதன்படி, போகோ சி65 டிசம்பர் 15ம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. டீஸர் படத்தில் ஃபிளிப்கார்ட் (Flipkart) லோகோ உள்ளது. இதை வைத்து போகோ சி65 ஆன்லைனில் விற்பனைக்கு அறிமுகமாகும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் போனின் பின்புற வடிவமைப்பு மற்றும் அதன் நிறத்தைக் காட்டுகிறது.
வெறும் ரூ.30,499க்கு ஒன்பிளஸ் பேட்..! ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல்-இன் அதிரடி ஆஃபர்கள்.!
புதிய ஊதா வண்ணத்தில் காட்டப்பட்டுள்ள போகோ சி65, ஒரு எல்இடி ஃபிளாஷுடன் இரண்டு பெரிய வட்ட வளையங்களைக் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சென்சார்கள் உள்ளன. அந்த கேமராவிற்கு அருகில் 50 எம்பி ஏஐ கேமரா என எழுதப்பட்டுள்ளது. முன்னதாகவே இந்த போன் உலகளவில் வெளியானதால் இதன் அம்சங்கள் நமக்கு தெரிந்தவையே.
இருந்தாலும் அதனை ஒரு முறை பார்க்கையில், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (Refresh rate), 600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட 6.74 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஜி85 என்கிற 4ஜி பிராசஸர் உடன் ஆன்ட்ராய்டு 13 அடிப்படையிலான எம்ஐயூஐ 14 மூலம் இயங்குகிறது. பின்புறம் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸுடன் இரண்டு கேமரா உள்ளது.
120Hz டிஸ்ப்ளே..8GB ரேம் உடன் புதிய 5G போன்கள்.! ரியல்மீயின் அடுத்த அதிரடி.!
8 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி மூலம் சராசரியாக 8 முதல் 24 மணிநேரம் வரை போனை பயன்படுத்தலாம். 192 கிராம் எடை மற்றும் 8.09 மிமீ தடிமன் கொண்டுள்ளதால் கையில் பிடிப்பதற்கு சற்று இலகுவாக இருக்கும்.
பாதுகாப்பைப் பொறுத்தவரையில் சைடு மவுன்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி உள்ளது. பர்பில், ப்ளூ, பிளாக் ஆகிய வண்ணங்களில் அறிமுகமாகமான போகோ சி65, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 129 டாலர் (ரூ.10,800) ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 149 டாலர் (ரூ.12,500) ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இதே மாதிரியான விலையை எதிர்பார்க்கலாம்.