பதவி நீக்கம்… உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மகுவா மொய்த்ரா..!

Mahuva Moitra

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற புகாரில் மகுவா மொய்த்ராவுக்கு எதிராக, நாடாளுமன்ற நன்னடத்தை குழு தலைவர் வினோத் சோங்கர் மக்களவையில் தாக்கல் செய்தார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள்… அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.! 

மக்களவையில் இருந்து திரிணமூல் எம்.பி. மகுவா மொய்த்ராவை நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் இருந்து திரிணமூல் எம்.பி. மகுவா மொய்த்ரா நீக்கப்பட்டதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

இதுதொடர்பாக மகுவா மொய்த்ரா கூறியதாவது, முழுமையாக விசாரணை நடத்தப்படாமல் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான் பணம் பெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும் ஒழுங்கு நடவடிக்கை குழு பதவியை நீக்க பரிந்துரை செய்துள்ளது.

எம்பி பதவியை பறிக்க நெறிமுறைக் குழுவிற்கு அதிகாரம் இல்லை, இது பாஜகவுடைய முடிவின் ஆரம்பம் என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்