‘விளைவுகளை சந்திக்க நேரிடும்’ – கேரள முதல்வர் எச்சரிக்கை..!
கேரளாவில் நவ கேரள சதாஸ் என்ற யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அதாவது கேரள மாநிலத்தில் அரசின் சாதனைகளை மக்களுக்கு நேரில் சென்று எடுத்துரைக்கும் வண்ணம் இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது.
இதற்காக பேருந்துகளில் கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பயணித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த மாதம் இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் இந்த யாத்திரைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நேற்று பெரும்பாவூரில் இருந்து கொத்தமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த முதல்வர் பினராயி விஜயன் கான்வாய் மீது காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான கேரள மாணவர் சங்கத்தினர் (கேஎஸ்யு) காலணிகளை வீசியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து குருப்பம்பாடி போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.
பாஜக முதலமைச்சர்கள் யார்.? சத்தீஸ்கர் ஓகே.! ராஜஸ்தான், ம.பி-க்கு இன்று இறுதி முடிவு.?
இந்த நிலையில், இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் கூறுகையில், நவகேரள சதாக்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவோர் கூட்டத்தை சீர்குலைக்க முயன்றால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், போராட்டக்காரர்கள் பொருட்களை நிகழ்ச்சிகள் மற்றும் பேருந்துகளில் வீசுதல் போன்ற செயல்களை தொடர்ந்தால், அவர்கள் மீது தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.