தளபதி 68 இந்த மாதிரி கதை அம்சம் கொண்ட படமா?

thalapathy 68 movie

லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் தன்னுடைய 68-வது திரைப்படமான ‘தளபதி 68’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். படத்தில் லைலா, ஸ்னேகா, பிரேம் ஜி, மீனாட்சி சௌத்ரி, பிரசன்னா, பிரபு தேவா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தினை எஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், படம் குறித்த சில தகவல்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தி வருகிறது.

சைலண்டாக நடைபெறப்போகும் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்! வருகை தருவாரா அஜித்?

அந்த வகையில், தற்போது படம் எந்த மாதிரி படம் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, தளபதி 68 திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளதாம். இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற போக்கிரி படத்தின் சாயலில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக படம் டைம் ட்ராவல் கதை அம்சத்தை கொண்ட படம் என்றும் அறிவியல் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படம் என தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், தற்போது கிடைத்த தகவலை வைத்து பார்க்கையில் படம் மாஸ் ஆன ஒரு கமர்சியல் படமாக உருவாக்கப்பட்டு வருகிறதாம். அது மட்டுமின்றி 100 % விஜய் படமாகவும் இந்த படம் உருவாகவுள்ளதாம்.

மேலும், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல நடிகரான வைபவ் பேட்டி ஒன்றில் பேசும்போது ” தளபதி 68 படம் நன்றாக வந்திருப்பதாகவும், படம் முழுக்க முழுக்க விஜய் படம் என்றும் படத்தின் முதல் பாடலை தான் கேட்டு மிரண்டுவிட்டதாகவும்” தெரிவித்து படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை மிகவும் அதிகப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்