பாஜக முதலமைச்சர்கள் யார்.? சத்தீஸ்கர் ஓகே.! ராஜஸ்தான், ம.பி-க்கு இன்று இறுதி முடிவு.?

Vishnu Deo Sai - Vasundhara Raje - sivaraj singh chouhan

5 மாநில தேர்தல் முடிந்து அதன் முடிவுகளும் கடந்த டிசம்பர் 3ஆம் தேதியே வெளியாகிவிட்டது. அதில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டி அறிவிக்கப்பட்டு மாநில முதல்வராக பதவி ஏற்றுவிட்டார். மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்று லால்டுஹோமா முதலமைச்சராக பொறுப்பேற்று விட்டார்.

சத்தீஸ்கரில் புதிய முதல்வராக விஷ்ணுதியோ சாய் தேர்வு…!

அதன் பிறகு கடந்த ஒரு வார காலமாக 3 மாநில முதல்வர் யார் என்ற கேள்வியும், அதற்கான தீவிர ஆலோசனையில் பாஜக தலைமையும் ஈடுபட்ட வந்த நிலையில் நேற்று அதற்கான ஒரு விடை கிடைத்துவிட்டது. சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சர் யார் என கட்சி தலைமை அறிவித்து விட்டது . எதிர்பார்த்தது போலவே, புதிய முதலமைச்சரை பாஜக தலைமை அறிவித்து விட்டது.

பழங்குடியினத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் பாஜக மாநில தலைவருமான விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ராமன் சிங் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதன் முதலாக விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து, இன்று அல்லது நாளை ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்திற்கு அடுத்த முதல்வர்கள் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் 2 முறை முதல்வராக பொறுப்பில் இருந்த முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் தற்போதைய மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் அந்தந்த மாநிலங்களில் முன்னணி போட்டியாளர்களாக போட்டியாளர்களாக உள்ளனர்.

மத்தியப் பிரதேச எம்.எல்.ஏ.க்கள் இன்று (திங்கள்கிழமை) தலைநகர் போபாலில் கூடி மாநில முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அறிவித்தபடி, இந்த கூட்டத்தை ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், தேசிய செயலாளர் ஆஷா லக்ரா மற்றும் ராஜ்யசபா எம்பி கே லக்ஷ்மண் ஆகியோர் ஆகியோர் அடங்கிய மேலிட பொறுப்பாளர்கள் குழு மேற்பார்வையிட உள்ளது.

அதே போல ராஜஸ்தான் மாநில முதலமைச்சரை தேர்ந்தெடுக்க அம்மாநில பாஜக மேலிட பார்வையாளர்கள் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே மற்றும் ராஜ்யசபா எம்பி சரோஜ் பாண்டே ஆகியோர் நாளை (செவ்வாய்க்கிழமை)  எம்எல்ஏக்களின் சட்டமன்றக் கூட்டத்தை கூட்டலாம் என்று கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே  பாபா பாலக்நாத், தியா குமாரி, கிரோடி லால் மீனா ஆகிய 3 எம்பிக்கள் ஆகியோர் முதல்வர் பதவி போட்டியில் முன்னணியில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்