மனிதர்களை பிணமாக மாற்றிய நாசிஸம்! கொடூரமானா உண்மை சம்பவம்…..
.
நாசிஸம் என்பது விஞ்ஞானம் மற்றும் இனவெறி உள்ளடக்கிய ஒரு வடிவமாக வகைப்படுத்தப்பட்டது.
மனிதனை வைத்து பரிசோதனை:
ஜெர்மன் விமானிகள் பனிக்கட்டி கடல்நீர் பிரதேசங்களை சமாளிக்க உதவும் நோக்கத்தில், உறைநிலைக்கு ஏற்ற மனிதர்களை உருவாக்க நடந்த சோதனையின் கீழ், முகாம் கைதிகள் சுமார் 5 மணி நேரம் வரையிலாக உறைபனி நீருக்குள் மூழ்கடிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.
டாக்டர் ஜோசப் மென்கிலி சோதனை:
ஜெர்மன் இனத்தை விரைவாக பெருக்குவதற்காக நிகழ்த்தப்பட சோதனை ஒன்றின் கீழ், இரட்டை குழந்தைகள் மற்றும் அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் குழந்தைகள் பிறப்பு எப்படி நடக்கிறது என்பதை அறிந்து, மிக விரைவாக ஜெர்மன் இனத்தை பெருக்க நினைத்தார் டாக்டர் ஜோசப் மென்கிலி. அதற்கான சோதனையில் 1000 ஜோடி இரட்டையர்கள் மீது ஆய்வு நிகழ்த்தப்பட்டது, அந்த ஆய்வின் முடிவில் வெறும் 200 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த சோதனைக்கு இதற்கு மேல் இவர்கள் பயன்படமாட்டார்கள் என்று ஒதுக்கப்பட்டவ்ரகளுக்கு எல்லாம் நேரடியாக இதயத்தில் குளோரோபார்ம் ஊசி போடப்பட்டுள்ளது.
நாஸி மருத்துவர்கள்:
நாஸி மருத்துவர்கள் காசநோய்க்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மக்களை தேடினார்கள் , அவர்கள் மூலம் காசநோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கலாம் என்று எண்ணினர். இதற்காக காசநோய் கிருமிகள், முகாம் கைதிகளில் நுரையீரலுக்குள் நேரடியாக செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தூக்கம் வராமல் இருக்க சோதனை:
போரில் தூக்கம் வராமல் இருக்க ஒரு சோதனை நடத்தபட்டது.அதில் சிறையில் உள்ள கைதிகளை அழைத்து ஒரு அறையில் சில மாதம் தூக்கம் வராமல் இருக்க போஸ்ஜின் எரிவாயு செலுத்தப்பட்டு.பின்னர் கைதிகள் தூக்கம் இல்லாமல் இருத்தனர்.நுரையீரலுக்குள் எரிச்சலை ஏற்படுத்தும் அந்த வாயு ஏற்கனவே பலவீனமாக இருந்த கைதிகள் பலரை விரைவாக கொன்று குவித்தது.
மூட்டுகள் மற்றும் மூட்டு எலும்புகள் சோதனை:
ஒரு நபரின் மூட்டுகள் மற்றும் மூட்டு எலும்புகள் நீக்கப்பட்டு வேறு ஒரு நபருக்கு பொருத்த முடியுமா என்று நாஸி மருத்துவர்கள் பரிசோதிக்க விரும்பினர். இந்த சோதனைக்காக முகாம் கைதிகளின் மூட்டுகள் மற்றும் மூட்டு எலும்புகள் தேவையில்லாமல் துண்டிக்கப்பட்டது. மிகப்பெரிய தோல்வியில் முடிந்த இந்த சோதனைக்காக பலர் கொல்லப்பட்டனர், முடமாக்கப்பட்டனர்.
செயற்கையாக கருவுற சோதனை:
பெண் கைதிகள் செயற்கையாக கருவுற பல்வேறு சோதனை முறைகளை நிகழ்த்தியது நாஸி மருத்துவ மற்றும் விஞ்ஞானிகள் குழு. இதற்காக சுமார் 300 பெண் முகாம் கைதிகள் மீது இரக்கமற்ற பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. மிருகத்தனமான மனிதர்கள் பிறக்க வேண்டும் என்பதற்காக சில பெண்களின் உடல்களுக்குள் விலங்குகளின் விந்தணுக்களை செலுத்தியும் சோதனை செய்துள்ளனர்.