50% முதல் 80% தள்ளுபடி.! ஆரம்பமானது Flipkart பிக் இயர் எண்ட் சேல்.!

பிரபல இ-காமெர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட்டில் ஒவ்வொரு முக்கியமான நிகழ்வின் போதும் ஒவ்வொரு விற்பனை ஆனது தொடங்கப்படும். அந்த வகையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் 2023 ஆம் ஆண்டு, இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ளது. இதனை ஃபிளிப்கார்ட்டுடன் இணைந்து கொண்டாடும் விதமாக நிறுவனம் ஒரு பெரிய விற்பனையை அறிவித்துள்ளது.
அதன்படி, பிக் இயர் எண்ட் சேல் (Big Year End Sale) ஆனது தொடங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையானது டிசம்பர் 9ம் தேதி அதாவது இன்றிலிருந்து டிசம்பர் 16ம் தேதி வரை அடுத்த ஏழு நாட்களுக்கு நடைபெறும். இந்த இயர் எண்ட் விற்பனையின் சலுகைகளை ஃபிளிப்கார்ட் ப்ளஸ் மெம்பர்ஷிப் உள்ளவர்கள் ஒரு நாள் முன்னதாகவே, அதாவது நேற்றிலிருந்து பெற்று வருகின்றனர்.
இன்று அனைத்து பிலிப்கார்ட் பயனர்களுக்கும் இந்த விற்பனையின் சலுகைகள் காட்டப்பட்டுள்ளது. இதில் தற்போது ஸ்மார்ட்போன்களுக்கான மொத்தத் தள்ளுபடி ஆனது வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால், இந்த விற்பனையின் பொழுது ஸ்மார்ட் போன் வாங்குபவர்கள் பேங்க் ஆப் பரோடா, ஹெச்டிஎஃப்சி போன்ற குறிப்பிட்ட பேங்கின் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற வீட்டு உபகரணங்கள் எலக்ட்ரானிக்ஸ் போன்றவற்றிற்கான சலுகைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி பேஷன் மற்றும் அக்சஸரீஸ்களுக்கு 50 முதல் 80 சதவீதம் தள்ளுபடியும் தள்ளுபடி உள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கும் 50 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது.
டிவி மற்றும் வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபகரணங்களுக்கு 75% வரை தள்ளுபடி உள்ளது. அதில் ரெப்ரிஜினேட்டர்களுக்கு 60 சதவீதமும், வாஷிங்மெஷின்களுக்கு 55 சதவீதமும் தள்ளுபடி உள்ளது. பியூட்டி, ஃபுட், பொம்மைகள் மற்றும் விளையாட்டு பொருட்களுக்கு 85 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது. வீட்டு உபயோகப் பொருட்களின் விலையானது ரூ.49-லிருந்து தொடங்குகிறது/
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025