தலா 1 கோடி ரூபாய் வேண்டும்.! திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் வழக்கு.!
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். அண்மையில் ஒரு பேட்டியில் லியோ திரைப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் மன்சூர் அலிகான் கூறுகையில், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறினார். இதற்கு திரையுலகினர் மத்தியில் பலத்த எதிர்ப்பு உருவானது.
நடிகை த்ரிஷா இது குறித்து கண்டனம் தெரிவித்து இருந்தார். தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகை குறித்து அவதூறு பேசியதாக மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டு இருந்தது.
கோபத்தில் தான் அந்த முடிவு எடுத்தேன்! இயக்குனர் அமீர் பேச்சு!
இது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். திரிஷா குறித்து அவதூறு பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். த்ரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார். இருந்தும், நடிகை த்ரிஷாவும் இது குறித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நேரில் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் , தான் அளித்த பேட்டியை முழுதாக பார்க்காமல் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடிகை த்ரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் கண்டனம் தெரிவித்து விட்டனர் என கூறி திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோர் தலா 1 கோடி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மானநஷ்ட ஈடு வழக்கு பதிந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி சதீஸ்குமார் தலைமையிலானா அமர்வின் முன்னர் திங்களன்று விசாரணைக்கு வருகிறது.