கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்றார்..!காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி..!!
கேரளாவில் பெய்த கனமழையால் 352 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் கேரளாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து உதவி குவிந்து வண்ணம் உள்ளது.
இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கேரளா மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்றார்.முதலில் திருவனந்தபுரம் விமான நிலையியத்திற்கு வந்த ராகுல் காந்தியை அம்மாநில காங்கிரஸ் தலைவர் உம்மன்சாண்டி வரவேற்றார்.அங்கிருந்து செல்லும் ராகுல் காந்தி வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார்.
DINASUVADU