3 வயது குழந்தையை பலாத்காரம் செய்ய முயன்ற விவசாயி போஸ்கோ சட்டத்தில் கைது..!!
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே எம்.சாலைகிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (43) இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகின்றார்.நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து 3 வயது பெண் குழந்தையை தூக்கி கொண்டு மறைவான பகுதிக்கு தூக்கி சென்று குழந்தையை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். உடனே குழந்தையின் அலறல் சத்தத்த கேட்ட பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் கந்தசாமியை பிடித்து கமுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.கந்தசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார், கந்தசாமியை கைது செய்தனர்.