காயத்திலிருந்து மீண்டார் புவனேஷ்வர் குமார்….!! இந்திய ஏ அணிக்காக விளையாடுகிறார்:
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயத்தில் குணணமடைந்ததாக இந்திய கிரிக்கெட் வாரியம் டிவிட்டரில் அறிவித்துள்ளது. அவர் நாளை தென்னாபிரிக்கா ஏ அணிக்கெதிரான போட்டியில் இந்திய ஏ அணிக்காக விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புவனேஷ்வர் குமார் இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் 18 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை. தற்போது அறிவிக்கப்பட்ட அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் புவனேஷ்வர் குமார் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஏ அணி மற்றும் இந்திய பி அணிகள் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது இடத்திற்க்கான போட்டிக்காக நடக்கும் ஆட்டத்தில் புவனேஷ்வர் குமார் இந்திய ஏ அணிக்காக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
அவர் முழுமையாக தயாராக இருக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது போட்டியில் விளையாடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.