காங்கிரஸ் எம்பி வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய ரூ.200 கோடி பணம்.? பிரதமர் மோடியின் உத்தரவாதம்.!  

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் (Rajya saba MP) தீரஜ் சாஹு (Dhiraj sahu ) வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.  இந்த சோதனையானது ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் தொடர்ந்தது.

இது ஒரு ஜனநாயகப் படுகொலை – மம்தா பானர்ஜி

இந்த 3 நாள் அமலாக்கத்துறை சோதனையில் தீரஜ் சாஹு தொடர்புடைய இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எவ்வளவு பணம் என்பது இன்னும் உறுதியாக கூறப்படவில்லை. மொத்தப் பணத்தின் அளவு சுமார் 200 கோடிக்கும் மேல் இருக்கும் என்றும்,  இந்த தொகை பலங்கிர் மாவட்டத்தில் உள்ள பௌத் டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட் வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒடிசாவின் சம்பல்பூர் மற்றும் சுந்தர்கர், பொகாரோ மற்றும் ஜார்கண்டின் ராஞ்சி என பல்வேறு இடங்களில் கடந்த புதன் கிழமை முதல் இந்த சோதனை நடைபெற்று வந்துள்ளது. கட்டுக்கட்டாக பணம் சிக்கியதால் அதனை எண்ணுவதற்கு பணம் என்னும் மிஷின் கொண்டு வரப்பட்டது . ஆனால் மிஷின் மூலம் ஓரளவுக்கு மட்டுமே எண்ண முடியும் என்பதால் இன்னும் பணம் எண்ணும் பணி தொடர்வதாக கூறப்படுகிறது.

இந்த ரெய்டு, பணம் பறிமுதல் பற்றி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், நாட்டு மக்கள் இந்தக் கட்டு கட்டான ரூபாய் நோட்டுகளை பார்த்துவிட்டு தங்கள் தலைவர்களின் (காங்கிரஸ்) நேர்மையான பேச்சுகளை கேட்க வேண்டும் என விமர்சித்தார்.

மேலும், பொதுமக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவும் மக்களுக்கு திருப்பித் கொடுக்கப்படும். இது மோடியின் உத்தரவாதம் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.