விளாத்திக்குளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்…!!

Default Image

ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி கேட்டு புதூர் யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

விளாத்திகுளம் தாலுகா புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நம்பிபுரம் பஞ்சாயத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் அனைவருக்கும் பணி  அளிக்கப்படவில்லை. வீட்டில் கழிப்பறை கட்டினால் தான், வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்கப்படும் என பஞ்சாயத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தில் ஒரு நாளுக்கு ரூ.224 சம்பளம். ஆனால் இங்குள்ள தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.160 மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு வேலை கிடையாது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை மறுப்பு என பல பிரச்னைகள் இருந்து வந்தன. இதனால் இத்திட்டத்தில் பணியாற்றி வந்த கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.இப்படி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து
நேற்று விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன் தலைமையில் கிராம மக்கள் புதூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மார்க்சிஸ்ட் புவிராஜ், சண்முகசுந்தரம், கீழநம்பிபுரம் கிளை செயலாளர் வெள்ளைச்சாமி, தங்கவேலு, முனியசாமி, புஷ்பம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதைதொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சிவபாலன் பேச்சுவார்த்தை நடத்தினார். வேலை உறுதி திட்டத்தில் எந்த நிர்பந்தமும் இல்லாமல் பதிவு செய்த அனைவருக்கும் வரும் வியாழக்கிழமை முதல் வேலை அளிக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்