காஞ்சனாவுக்கு டஃப் கொடுத்ததா கான்ஜுரிங் கண்ணப்பன்? திரை விமர்சனம்.!

Conjuring Kannappan

சந்தானத்தை போல காமெடியனாக இருந்து கொண்டு, தற்போது ஹீரோவாக படங்கள் நடித்து வரும் நடிகர் சதிஷ், ‘கன்ஜூரிங் கண்ணப்பன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் (டிசம்பர் 8) இன்று திரையரங்குகளில் வெளியானது.

அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் எழுதி இயக்கியுள்ள ‘கன்ஜூரிங் கண்ணப்பன்’ படம் திகில் கலந்த நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஹாரர் காமெடி தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல.

தமிழ் சினிமாவில் திகில் கலந்த நகைச்சுவையை பயன்படுத்துவது வழக்கமான ஒரு பார்முலா, அதில் அழுத்தமான திரைக்கதை இல்லாமல் புதுவிதமாக ஏன் முயற்சி செய்யக்கூடாது என்பதற்கு ‘கன்ஜூரிங் கண்ணப்பன்’ மற்றொரு உதாரணம்.

அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கிறதா? இல்லையா? என்று பார்க்கலாம்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் இருவர் யாருனு தெரிகிறதா? இந்த ஜாம்பவானின் மகன்களா!

கதைச்சுருக்கம்

கேமிங் துறையில் சிறந்து விளங்கும் கேபி (சதீஷ்) அதே துறையில் வேலை தேடடி வருகிறார். அப்பொழுது, சூனியம் செய்து வைக்கப்பட்டிற்கும் இறகு கொத்திலிருந்து ஒன்றை மட்டும் தெரியாமல் எடுக்க, இதனால்உறங்கும் போதெல்லாம் அவரது கனவில் பேயிடம் சிக்கிக்கொள்கிறார். அவர் மட்டும் இல்லாமல், அவரது குடும்பம் நண்பர்கள் என அவரை சார்ந்துள்ள அனைவரும் சிக்கிகொள்கின்றனர். இதனையடுத்து, அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பது தான் படத்தின் மீதி கதை.

ஆடை இல்லாமல் நடிப்பது தவறு இல்லை! அனிமல் பட நடிகை திரிப்தி டிம்ரி பேச்சு!

விமர்சனம்

கான்ஜுரிங் கண்ணப்பன் தனித்துவமான கதையம்சம் கொண்ட படமாக இருந்தாலும் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக செல்கிறது. அதனை தொடர்ந்து தொய்வை ஏற்படுத்துகிறது. இடைவேளை அடுத்து சில தேவையில்லாத காட்சிகளை நீக்கி இருந்தால் பிளாஷ்பேக் காட்சிகள் கை கொடுத்துஇருக்கும். ஆனாலும் காமெடி கொஞ்சம் படத்தை காப்பாற்றி உள்ளது.

வழக்கம்போல், சதீஷ் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் தங்களது நடிப்பை வெளிப்படுத்தியுள்னர். அவர்களுக்கு அடுத்தபடியாக சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், வி.டி.வி கணேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் டிப்பில் முக்கிய பங்கு வகுத்தனர்.

மற்ற எல்லா ஹாரர் காமெடிப் படங்களைப் போலவே, ‘கன்ஜூரிங் கண்ணப்பன்’ படமும் ஃப்ளாஷ்பேக்கில் ஒரு பழிவாங்கும் கான்செப்டை இயக்குனர் புகுத்தியுள்ளார். அதன்படி, ஃப்ளாஷ்பேக் பகுதிகள் ஒரு அளவிற்கு வேலை செய்துள்ளது.

ஒரே வாரத்தில் ஹிந்தி சினிமாவை அலற வைத்த ரன்பிர் கபூர்.! உலகளவில் எத்தனை கோடி தெரியுமா?

மிதப்படி, சொல்லப்போனால் கதைக்கரு, பின்னணி இசை படத்திற்கு பக்கம் பலம். ஆனால், படத்தில் வரும் காட்சிகளில் அடுத்து என்ன என்று எளிதாக கணிக்க முடிவது போல் இருப்பதால் சற்று ரசிக்க வைக்கவில்லை.

பல இடங்களில் சிரிப்பில்லாத நகைச்சுவை மொத்தத்தில் கான்ஜுரிங் கண்ணப்பன் ஏமாற்றம் என்றே சொல்லாம். ட்ரைலரை வைத்து பார்க்கையில் ஓரளவுக்கு ஓகே என்பது போல் இருந்தது. ஆனால், படத்தில் வித்தியாசமான கதையை புகுத்த நினைத்த இயக்குனர் அதை சரியாக செய்யாமல் தவறவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்