வாழைப்பூ சட்னியை இப்படி செஞ்சா 10 இட்லி கூட சாப்பிடலாம்! சூப்பர் டிப்ஸ் இதோ!

banana flower chutney

ஒரு சில தாவரங்கள் தான் அதன் அனைத்து பாகங்களுமே உபயோகப்படுத்தப்படுகிறது, அதில் இந்த வாழ மரமும் ஒன்று இதில் கிடைக்கக்கூடிய பழம் காய், இலை ,தண்டு, பூ என அனைத்துமே உபயோகமாக உள்ளது. வாழைப்பூவை வைத்து பொரியல், கூட்டு, குழம்பு, வடை என அனைத்து ரெசிபிகளுமே  செய்திருப்போம், அந்த வகையில் இன்று வாழைப்பூவை வைத்து சட்னி அதிக சுவையோடு செய்வது எப்படி என்று பார்ப்போம்..

தேவையான பொருட்கள்

  • மல்லி- இரண்டு ஸ்பூன்
  • சீரகம் -2 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய்- ஐந்து
  • உளுந்து -இரண்டு ஸ்பூன்
  • கடலை பருப்பு -2 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம்- 100 கிராம்
  • பூண்டு- 15
  • புளி -நெல்லிக்காய் அளவு
  • எண்ணெய்- நான்கு ஸ்பூன்
  • வாழைப்பூ-ஒரு பூ வீதம்

செய்முறை

முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு வைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து ,கடலைப்பருப்பு சிவந்ததும் மல்லி, சீரகம், வரமிளகாய் சேர்த்து வறுத்து எடுத்து ஆற வைக்கவும். பிறகு அதே எண்ணெயில் வாழைப்பூவை வதக்கவும் வாழைப்பூ அரை பதத்தில் வெந்தவுடன் பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும், வதங்கியவுடன் உப்பு மற்றும் புளி சேர்த்து நன்கு ஆற வைத்து அரைத்து எடுக்கவும் .இப்போது சத்தான வாழைப்பூ சட்னி ரெடி இதை இட்லி தோசை அனை த்து விதமான சாத வகைகளுக்கும் சுவையாக இருக்கும்.

பயன்கள்

இப் பூவுக்குள் ஒளிந்திருக்கும் சத்துக்கள் நம் உடலில் பல அதிசயங்களை செய்யும். இது பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று கூட கூறலாம்.

கருப்பை

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் கருப்பையை வலுப்படுத்தும் குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பூவை தொடர்ந்து நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இது சினைப்பையில் உள்ள நீர்க்கட்டி சாக்லேட் கட்டி போன்றவற்றிற்கும் ஒரு நல்ல மருந்தாகும்.

சிறுநீரகம்

சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய கற்களை கரைக்கும் தன்மை இந்த வாழ பூவிற்கும், வாழைத் தண்டிற்கும் உள்ளது.

சர்க்கரை நோயாளிகள்

வாழைப்பூவில் உள்ள துவர்ப்பு தன்மை ரத்தத்தில் உள்ள அதிக அளவு சர்க்கரையை கரைத்து வெளியேற்றுகிறது இதனால் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கப்படுகிறது.சர்க்கரை உள்ளவர்கள்  வாரத்தில் இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்வது நல்லது. மேலும் வாய்ப்புண்  மற்றும் வாய் துர்நாற்றத்தையும் இது போக்க  கூடியதாக உள்ளது. ஆகவே வாரத்தில் மூன்று நாட்கள் ஆவது வாழைப்பூவை சட்னி அல்லது வேறு ஏதேனும் வகைகளில் நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்