சட்டத்தின் முன் அனைவரும் சமம்.. எடப்பாடி பழனிசாமி கூறிய காரணத்தை ஏற்க மறுத்த ஐகோர்ட்!
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோடநாடு வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக இபிஎஸ்.க்கு விலக்கு அளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, மேத்யூ சாமுவேல் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோருவது ஏன்? எதன் அடிப்படையில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோருகிறீர்கள்? என இபிஎஸ்க்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
காலில் ஏற்பட்டுள்ள காயம் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு விலக்கு கோருகிறோம் என்றும் கோடநாடு வழக்கில் சாட்சியம் அளிப்பதற்கு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், விரிவாக வாதிட அனுமதிக்க வேண்டுமென்ற பழனிசாமி தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணையை டிசம்பர் 15க்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட மேத்யூ சாமுவேலுக்கு எதிராக இபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அரசை பிறகு விமர்சித்து கொள்ளலாம்.. தற்போது மக்களுக்கு உதவுவோம் – கமல்ஹாசன் பேட்டி
அதாவது, கொடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், அவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி, ரூ.1,.10 மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பி வைத்து உத்தரவிட்டிருந்தது. நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது, தமது வீட்டில் சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரி எட்பபாடி பழனிசாமி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதன்படி, நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்ததோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சாமுவேல் மேத்யூ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, இபிஎஸ்-க்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் தெரிவித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.